உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வங்கதேசத்தின் போட்டியை எதிர்கொள்ள டியூட்டி டிராபேக்கை உயர்த்த வேண்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

வங்கதேசத்தின் போட்டியை எதிர்கொள்ள டியூட்டி டிராபேக்கை உயர்த்த வேண்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

திருப்பூர்:அமெரிக்காவின் அதிரடியான வரி உயர்வுக்கு மத்தியில், வங்கதேசத்தின் போட்டியை சமாளிக்க, 'டியூட்டி டிராபேக்' சலுகையை உயர்த்தி வழங்க வேண்டுமென, ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், முன்னணியில் இருப்பது அமெரிக்கா. ஆண்டுக்கு, 35 சதவீதம் அளவுக்கு, ஏற்றுமதி நடந்து வருகிறது. இந்திய பொருட்களுக்கு, அமெரிக்காவில் மொத்த இறக்குமதி வரி 16.50 சதவீதமாக இருந்தது, தற்போது 41.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. நம் நாட்டுடன் ஒப்பிடுகையில், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு, 5 முதல் 7 சதவீதம் அளவுக்கு, அமெரிக்காவில் வரி குறைவு. இதனால் இந்த இடைவெளியை ஈடுகட்டும் வகையில், 'டியூட்டி டிராபேக்' சலுகையை, மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்றுமதி பொருள் உற்பத்திக்காக, மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யும் போது செலுத்திய சுங்கவரியை திரும்ப கொடுப்பது, 'டியூட்டி டிராபேக்' திட்டம். கடந்த 2016 வரை, பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு, 8.75 சதவீதம் வரை, 'டியூட்டி டிராபேக்' வழங்கப்பட்டது. தற்போது, 2.25 சதவீதமாக குறைந்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: அமெரிக்க ஆடை ஏற்றுமதியில், வங்கதேசத்தை தொடர்ந்து, வியட்நாம், பாகிஸ்தான் நாடுகளும் கடும் போட்டியாக மாறும் அபாயம் உள்ளது. அந்த நாடுகளை சமாளிக்க ஏதுவாக, தற்காலிக தீர்வாக, 'டியூட்டி டிராபேக்' திட்டத்தில், 10 சதவீதம் வரை, சலுகை வழங்க அரசு முன்வர வேண்டும். வட்டி மானியம் போன்ற ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை