தொலைத்தொடர்பு உபகரணங்கள் சான்றிதழ் கட்டணம் குறைப்பு
புதுடில்லி:தொலைத் தொடர்பு மற்றும் அது சம்பந்தபட்ட தொழில்நுட்ப தயாரிப்புகள் வகைகளுக்கான பாதுகாப்பு சான்றிதழ் கட்டணத்தை அரசு குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகள் உருவாக்கம் மற்றும் இப்பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கான இணக்க விதிகளை எளிமைப்படுத்த, தொடர்ச்சியான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கப்பதிலும் ஆர்வம்காட்டி வருகிறது. இதையடுத்து, தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுக்கான பாதுகாப்பு சான்றிதழ் கட்டணத்தை 95 சதவீதம் வரை குறைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான புதிய கட்டணம், இம்மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.