உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / எம்.எப்.லைட் வசதிக்கு செபி ஒப்புதல் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு 10 லட்சம் ரூபாய்

எம்.எப்.லைட் வசதிக்கு செபி ஒப்புதல் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு 10 லட்சம் ரூபாய்

மும்பை:மியூச்சுவல் பண்டு சந்தையில் புதிய வரவாக, 'எம்.எப். லைட்' எனும், புதிய முதலீட்டு வசதியை அறிமுகம் செய்ய, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' ஒப்புதல் அளித்துள்ளது.செபியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எம்.எப். லைட் வசதியின்படி, மியூச்சுவல் பண்டு சொத்து மேலாண்மை நிறுவனங்களான ஏ.எம்.சி.,க்கள், முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள முதலீட்டாளர்களுக்கென, 'எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு' எனப்படும் இ.டி.எப்., போன்ற, சந்தையை பின்தொடரக்கூடிய இணை முதலீட்டு திட்டங்களை அறிமுகம் செய்யலாம்.பி.எஸ்.சி., 500 மற்றும் என்.எஸ்.சி., 50 போன்ற, சந்தைகளின் வர்த்தக குறியீட்டு அடிப்படையில் முதலீடு செய்யப்படும், பாஸிவ் மியூச்சுவல் பண்டு திட்டங்கள், இந்த எம்.எப். லைட் வசதியின்கீழ் அறிமுகப்படுத்தப்படலாம். இதுபோன்ற மியூச்சுவல் பண்டு திட்டங்களை அறிமுகம் செய்யும் நிறுவனங்களுக்கான விதிமுறைகள், வழக்கமான மியூச்சுவல் பண்டு திட்டங்களுக்கானவற்றை விட, எளிதாக இருக்கும். இதுபோன்ற மியூச்சுவல் பண்டு திட்டங்களில், குறைந்தபட்ச முதலீடு உச்சவரம்பு, ஒரு முதலீட்டாளருக்கு, ஒரு திட்டத்துக்கு 10 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று செபி தெரிவித்துள்ளது. எம்.எப். லைட் அனுமதியால், ஏ.எம்.சி., எனும், புதிய சொத்து மேலாண்மை நிறுவனங்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும் என்றும்; பங்குச் சந்தைகள் மற்றும் மியூச்சுவல் பண்டு வர்த்தகம் மேலும் விரிவடைய வழியேற்படும் என்றும், செபி தெரிவித்துள்ளது. இவை தவிர, எப் அண்டு ஓ., தொடர்பான மாற்றங்கள், செபி தலைவர் மாதவி புரி புச் மீது, 'ஹிண்டன்பர்க்' கூறிய குற்றச்சாட்டுகள் உட்பட மற்ற விஷயங்கள் குறித்து, செபி நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகிஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ