உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / எண்கள் சொல்லும் சேதி

எண்கள் சொல்லும் சேதி

3,000 கோடி ரூபாய்

மினிமலிஸ்ட் நிறுவனத்தை, 3,000 கோடி ரூபாய்க்கு வாங்குவது தொடர்பாக, ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான மினிமலிஸ்ட், சரும பராமரிப்பு மருந்துகளை, நுகர்வோருக்கு நேரடியாக வினியோகிக்கிறது. இந்தியாவில் அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களுக்கான சந்தை விரிவடையும் நிலையில், எச்.யு.எல்., மினிமலிஸ்ட் பிராண்டை வாங்க ஆர்வம் காட்டுகிறது.

26 சதவீதம் கார்கள்

'ஹூண்டாய்' நிறுவனம் கடந்த ஆண்டில் நாடு முழுதும் விற்பனை செய்த கார்களில், 26 சதவீதத்தை, சரக்கு ரயில்களின் வாயிலாக வினியோகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அனைத்து கார்களும், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுார் ஆலையில் இருந்து, நாட்டின் வடகிழக்கு பகுதிக்கு வினியோகிக்கப் பட்டுள்ளன. 1.57 லட்சம் கார்கள், ரயில்கள் வாயிலாக வினியோகம் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி