மேலும் செய்திகள்
உணவு பொருள்களை வீணாக்காதீர்!
17-Oct-2024
புதுடில்லி:'பெப்சிகோ, யுனிலீவர்' போன்ற சர்வதேச பொட்டல உணவுப் பொருள் தயாரிப்பு பெருநிறுவனங்கள், பிற நாடுகளை விட குறைவான ஆரோக்கியம் கொண்ட பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்வதாக, தன்னார்வ நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த, 'அக்சஸ் டூ நியூட்ரிஷன் இனிஷியேட்டிவ்' எனப்படும், ஏ.டி.என்.ஐ., அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:குறைந்த வருவாய் பிரிவினரை அதிகம் கொண்ட நாடுகளில், குறைவான ஆரோக்கியம் கொண்ட உணவுப் பொருட்களை, சர்வதேச பேக்கேஜ்டு உணவுப் பொருட்கள் தயாரிப்பு பெருநிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. மாறாக, ஊட்டச்சத்துக்கான தரக்குறியீடுகளுடன், ஐரோப்பிய நாடுகளில் இதே பெயரிலான உணவுப் பொருட்களை விற்கின்றன.கிட்டத்தட்ட 30 நிறுவனங்களின் உணவுப் பொருட்களை ஆய்வு செய்ததில், வளர்ந்த நாடுகளுக்கும், குறைந்த வருவாய் பிரிவினரை கொண்ட நாடுகளுக்கும், வினியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் ஆரோக்கிய குறியீடு வேறு படுவது தெரிய வந்தது.உடல் பருமனை குறைப்பதற்கான மருத்துவ சிகிச்சை பெறுவது, உயர் வருவாய் கொண்ட நாடுகளில் அதிகரித்ததால், அங்கெல்லாம் சிப்ஸ் உள்ளிட்ட பேக்கேஜ்டு உணவுப் பொட்டலங்கள் விற்பனை குறைந்துள்ளது. இந்த இழப்பை ஈடுகட்ட, புதிய பொருட்களையும், புதிய சந்தை களையும் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் நாடுகின்றன.தங்கள் தயாரிப்புகளின் விற்பனையில், வளர்ந்த நாடுகளைவிட, நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரைக் கொண்ட நாடுகளில் அதிக வருவாயை சர்வதேச உணவு நிறுவனங்கள் ஈட்டுகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆரோக்கியம் குறைவான குறியீட்டைக் கொண்ட, பொட்டல உணவுப் பொருட்களை இந்தியா, எத்தியோப்பியா, கானா, கென்யா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா, வியட்னாம் ஆகிய நாடுகளில் பெப்சிகோ, யுனிலீவர் நிறுவனங்கள் விற்பனை செய்வதாக ஏ.டி.என்.ஐ., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, ஐரோப்பிய நாடுகளில் ஏ, பி., என தரக்குறியீட்டில் 'லேஸ் சிப்ஸ், டிராபிகானா ஜூஸ்' ஆகியவற்றை பெப்சிகோ நிறுவனம் விற்பனை செய்யும் நிலையில், இந்தியாவில் அதுபோல வேறுபாடு ஏதுமில்லை. யுனிலீவர் நிறுவனத்தின் 'குவாலிடி வால்ஸ், மேக்னம் ஐஸ்கிரீம்கள், நார் சூப் மற்றும் ரெடிமிக்ஸ்' மற்றும் 'டனான்' நிறுவனத்தின் 'புரோடினக்ஸ்' ஆகியவையும் இதேபோல விற்கப்படுவதாக ஏ.டி.என்.ஐ., குறிப்பிட்டுள்ளது.
17-Oct-2024