மேலும் செய்திகள்
'கூகுள் பிக்சல்' போனை ஆன்லைனில் வாங்கலாம்
30-May-2025
மும்பை:இந்திய வாகன சந்தையில் 25 ஆண்டுகளையும், உலகளவில் 130 ஆண்டுகளையும் நிறைவு செய்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம், இந்தியாவுக்கான அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதையை வெளியிட்டுஉள்ளது.நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில், வாகன இருப்பை விரிவாக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது தன் செயல்பாட்டை 165 நகரங்களில் இருந்து, ஆண்டு இறுதிக்குள் 200 நகரங்களாக அதிகரிக்கவும் இலக்கு வைத்துஉள்ளது. அத்துடன், ஸ்கோடா விற்பனை மையங்களை, 290ல் இருந்து 350 ஆக அதிகரிக்க உள்ளது.வணிகத்தை விரிவுபடுத்த, பழைய கார்கள் விற்பனையில் கவனம் செலுத்த உள்ள இந்நிறுவனம், தன் வாடிக்கையாளர்களை அதிகரிக்க, கார் வாடகை சேவை, கிராமப்புற சந்தைப்படுத்துதல், பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனையை மேற்கொள்வது ஆகியவற்றுக்கும் திட்டமிட்டு உள்ளது.கார் பராமரிப்பு செலவை குறைக்கும் 'ஸ்கோடா கேர்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, இரண்டு ஆண்டுகள் அல்லது 30,000 கி.மீ., வரை பயன்படுத்தப்பட்டுள்ள கார்களுக்கு வழங்கப்படுகிறது.
30-May-2025