மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் விதி மீறல் 169 நிறுவனங்கள் மூடல்
03-Apr-2025
நாட்டின் சேவை துறையில் 500 கோடி ரூபாய்க்கு குறைவான வர்த்தகம் கொண்ட நிறுவனங்கள், அத்துறையின் 63 சதவீத வேலைவாய்ப்பை அளிப்பதாக மத்திய அரசின் ஆய்வு தெரிவிக்கிறது.மத்திய புள்ளியியல் துறை சார்பில் நடத்தப் பட்ட சேவை துறைக்கான ஆய்வறிக்கை:கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை, 10,005 நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. நிறுவனங்களின் பணிகள், முகவரி சரிபார்ப்புடன் அவற்றின் மொத்த வர்த்தகம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, வேலைவாய்ப்பு அளிப்பதில் பெருநிறுவனங்களை விட சிறிய நிறுவனங்களே பெரும்பங்கு வகிப்பது தெரிய வந்தது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
03-Apr-2025