மேலும் செய்திகள்
பங்கு சந்தை நிலவரம்
13-Feb-2025
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய சந்தை குறியீடுகள் லேசான இறக்கத்துடன் நிறைவு செய்தன. தொடர் சரிவுக்குப் பின், நேற்று முன்தினம் சந்தைகள் உயர்வு கண்ட நிலையில், மீண்டும் சரிவுப் பாதைக்குதிரும்பின. தொடர்ச்சியான அன்னிய முதலீடுகள் வெளியேற்றத்தால், நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் துவங்கின. இதனை தொடர்ந்து, சந்தை உயர்வுக்கு ஊக்கமளிக்கும் செய்திகள் எதுவும் இல்லாததால், முதலீட்டாளர்கள் முன்னணி நிறுவன பங்குகளை விற்று, லாபத்தை பதிவு செய்ததால், சந்தை சரிவை கண்டது. பிற்பகல் வரை ஊசலாட்டம் நீடித்தது. கரடி சந்தை என்றால் என்ன?
பங்குகள், பத்திரங்கள் உள்ளிட்டவற்றின் விலை, சமீபத்திய உயர்வில் இருந்து 20 சதவீதம் அல்லது அதற்கு மேல் வீழ்ச்சி காண்பதை 'கரடி சந்தை' என குறிப்பிடுவர். இது போன்ற சமயங்களில், முதலீட்டாளர்கள் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவர். எதிர்மறை செய்திகள் பங்குகளின் விலையை மேலும் குறைக்க வழிவகுக்கும். கரடி சந்தை, பொருளாதார சரிவுடன் தொடர்புடையது என்றாலும், பெரிய பொருளாதார நாடுகளில் தன்னிச்சையாகநிகழலாம்.அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள், 4,787 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.73 சதவீதம் அதிகரித்து, 75.77 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்து, 86.98 ரூபாயாக இருந்தது.
13-Feb-2025