உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

தயக்கத்தோடு நின்றன

 பெடரல் ரிசர்வ் கமிட்டி சந்திப்பின் 'மினிட்ஸ்' வெளிவரப் போகிறது. அதில், இந்த ஆண்டில் எப்போது முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்பதற்கான விபரங்கள் இடம்பெற்றிருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டுக்குள் ஆறு முறையேனும் வட்டி குறைக்கப்படும் என்ற யூகத்தை பல சந்தை ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்ததால், அமெரிக்க பங்குச் சந்தைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. ஆனால், அமெரிக்காவின் 10 ஆண்டு கடன் பத்திரங்களின் வருவாய் உயர்ந்திருப்பதும், டாலர் குறியீடு உயர்ந்திருப்பதும் வேறொரு செய்தியை சொல்கின்றன. அதாவது, அமெரிக்க மத்திய வங்கி விரைவில் வட்டி குறைப்பை மேற்கொள்ளாது என்பது தான் அந்தச் செய்தி. அதனால், காலை முதலே சரிவுடன் இருந்த நம் பங்குச் சந்தைகள் மாலையிலும் நஷ்டத்துடனே முடிவடைந்தன மாநிலங்கள் வெளியிட்டுள்ள கடன் பத்திரங்கள், இந்தக் காலாண்டின் முதல் வாரத்தில் வெளியாகின. அவற்றின் வட்டி விகிதம் 7.70 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது என்ற செய்தியை, சந்தை ஆய்வு நிறுவனமான 'இக்ரா' சுட்டிக்காட்டியது செங்கடலில் ஈரானின் போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், சர்வதேச அளவில் பதற்றம் உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற, இறக்கம் தென்படுகிறது. இதுவும் வர்த்தகர்களை கவலை கொள்ள வைத்தது.

ஏற்றம் கண்ட பங்குகள்

 பஜாஜ் ஆட்டோ  அதானி என்டர்பிரைசஸ்  இண்டஸ் இண்ட் வங்கி  அதானி போர்ட்ஸ்  ஐ.டி.சி.,

 ஹிண்டால்கோ  ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல்  டாடா ஸ்டீல்  எல்.டி.ஐ., மைண்டுட்ரீ இன்போசிஸ்

சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 71,892.48நேற்றைய முடிவு: 71,356.60மாற்றம்: 535.88 இறக்கம் சிவப்புநிப்டிமுந்தைய முடிவு : 21,665.80நேற்றைய முடிவு: 21,526.20மாற்றம்: 139.60 இறக்கம் சிவப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்