மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
நாட்டின் சரக்கு ஏற்றுமதி 7% உயர்வு
16-Sep-2025
முந்தைய முடிவு: 71,657.71நேற்றைய முடிவு: 71721.18மாற்றம்: 63.47 ஏற்றம் பச்சை
முந்தைய முடிவு: 21,618.70நேற்றைய முடிவு: 21,647.20மாற்றம்: 28.50 ஏற்றம் பச்சை
அமெரிக்காவின் பணவீக்க விகிதம் குறித்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, இந்திய சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில் சிறிய உயர்வுடனேயே நிறைவடைந்தன இன்போசிஸ், டி.சி.எஸ்., நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் வெளியாக இருந்ததை முன்னிட்டு, தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் காணவில்லை. அமெரிக்க வாடிக்கையாளர்கள் செலவுகளை குறைத்ததன் காரணமாக, டிசம்பர் காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள் வர்த்தகர்களிடையே மந்தமாகவே இருந்தன. இதனால் இத்துறை சார்ந்த பங்குகளின் வர்த்தகம் சோம்பியே இருந்தது. வர்த்தக இறுதியில் இன்போசிஸ் இறக்கத்தை சந்தித்தது. டி.சி.எஸ்., ஏற்றத்துடன் முடிவடைந்தது தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, 'பாலிகேப் இந்தியா' நிறுவன பங்குகள் விலை 20.50 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது. வரித் துறையினரின் சோதனை குறித்த செய்திகள் வெளியானதை அடுத்து, இந்நிறுவன பங்குகள் அதிக விலை சரிவைக் கண்டன மாறாக, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவன பங்குகள் விலை 2.58 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 18.39 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது நேற்றைய வர்த்தகத்தில், மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவன பங்குகள் ஓரளவு நன்றாகவே வர்த்தகமாகின. இவை கிட்டத்தட்ட 0.7 சதவீத லாபத்தை பதிவு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், பாதுகாப்பற்ற கடன்கள் குறித்து தெரிவித்த கருத்துகள், 'ஆர்.பி.எல்., - ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட், ஆதித்ய பிர்லா கேப்பிட்டல்' ஆகிய நிறுவன பங்குகளுக்கு சாதகமான சூழலை அமைத்துக் கொடுத்தது மும்பை பங்கு சந்தையில், மொத்தம் வர்த்தகமான 3,937 நிறுவன பங்குகளில், 2,355 நிறுவன பங்குகள் லாபத்துடன் முடிவடைந்தன. 1,475 நிறுவன பங்குகள் விலை சரிவுடன் முடிவடைந்தன. 107 பங்குகள் எந்த விதமான மாற்றமும் இன்றி முடிவடைந்தன.
ஹீரோ மோட்டோகார்ப் பஜாஜ் ஆட்டோ ரிலையன்ஸ் ஆக்சிஸ் பேங்க் பி.பி.சி.எல்.,
இன்போசிஸ் டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் எஸ்.பி.ஐ., லைப் இன்ஷூரன்ஸ் எச்.யு.எல்., விப்ரோ
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025
16-Sep-2025