மேலும் செய்திகள்
டாப் கியரில் வாகன ஏற்றுமதி
27-Oct-2025
ஐ.பி.ஓ., ெவளியிட டாடா சன்ஸ் மறுப்பு
16-Oct-2025
முந்தைய முடிவு: 71,683.23நேற்றைய முடிவு: 71,423.65மாற்றம்: 259.58 இறக்கம் சிவப்பு
முந்தைய முடிவு : 21,622.40நேற்றைய முடிவு: 21,571.80மாற்றம்: 50.61 இறக்கம் சிவப்பு
பேரிடர் காலத்தை எதிர்கொள்வதற்கான சோதனையில் ஈடுபடும் பொருட்டு, சனிக்கிழமையன்று சிறப்பு வர்த்தகம் பகுதி நேரம் செயல்படும் என முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் வழக்கம் போலவே சந்தை முழுமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது துவக்கத்தில் சற்று பசுமை காட்டிய சந்தை, வர்த்தக இறக்கத்தில் சிவந்து முடிந்தது. எப்.எம்.ஜி.சி., மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டது, சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது வார இறுதியில், அமெரிக்க பங்கு சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்த போதிலும் கூட, அதன் பிரதிபலிப்புகள் எதுவுமின்றி, உள்நாட்டு சந்தைகள் சரிவையே கண்டன. வர்த்தகர்கள், 'பிராபிட் புக்கிங்' செய்யும் எண்ணத்துடன், தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் எப்.எம்.சி.ஜி., துறை சார்ந்த பங்குகளை அதிகளவில் விற்றனர் தனியார் வங்கிகளை பொறுத்தவரை குறிப்பிட்ட சில வங்கி பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இப்பங்குகளில் அண்மையில் கரெக்ஷன் நடைபெற்றதை அடுத்து, இவற்றை ஓரளவுக்கு வாங்க வர்த்தகர்கள் முன்வந்தனர். அதுவும், தேர்ந்தெடுத்த சில வங்கி பங்குகளை மட்டுமே வாங்கினர். வங்கி பங்குகளை போலவே நிதிச் சேவை நிறுவன பங்குகளும், ஓரளவு வர்த்தகர்களால் வாங்கப்பட்டன நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், எச்.யு.எல்., மற்றும் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள், அவற்றின் முடிவுகள் வெளிவந்த நிலையில், சற்று அழுத்தத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது மும்பை பங்கு சந்தையில், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவன பங்குகள் விலை 0.80 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 9 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை கண்டிருந்தது இதேபோல் 'ஹிந்துஸ்தான் யுனிலீவர்' நிறுவனத்தின் பங்குகள் 1.08 சதவீதம் அளவுக்கு விலை சரிவைக் கண்டது அன்னிய முதலீட்டாளர்களை தொடர்ந்து பங்குகளை விற்று வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை 3,690 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியானது. மும்பை பங்கு சந்தையில், மொத்தம் 3,908 நிறுவன பங்குகள் வர்த்தகமான நிலையில், 2,062 பங்குகளின் வர்த்தகம் லாபத்துடன் நிறைவுற்றன. 1,752 பங்குகள் விலை சரிவைக் கண்டன. 94 நிறுவன பங்குகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை.
கோல் இந்தியா அதானி போர்ட்ஸ் அதானி எண்டர்பிரைசஸ் கோட்டக் மஹிந்திரா ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்
எச்.யு.எல்., டி.சி.எஸ்., எம்.அண்டு எம்., இண்டஸ்இண்டு பேங்க் எச்.சி.எல்., டெக்
27-Oct-2025
16-Oct-2025