மேலும் செய்திகள்
ஐ.டி., துறை சார்ந்த முதலீடு என்னவாகும்?
17-Feb-2026
முந்தைய முடிவு: 72,186.09நேற்றைய முடிவு: 72,152.00மாற்றம்: 34.09 மைனஸ்
முந்தைய முடிவு: 21,929.40நேற்றைய முடிவு: 21,930.50மாற்றம்: 1.10 மைனஸ்
அமெரிக்காவில் வெளிவந்த மூன்றாம் காலாண்டு முடிவுகள் திருப்தியாக இருந்ததால், அது நம் சந்தையில் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அதேபோல், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், பிப்ரவரி 6ம் தேதி, 92.52 கோடி ரூபாய் அளவுக்கு நம் பங்குகளை வாங்கியுள்ளனர் என்ற செய்தியும் நம்பிக்கை அளித்தது. மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் விலை உயராமல் இருக்க எடுத்த நடவடிக்கைகளின் வாயிலாக, நம் சில்லரை பணவீக்கம் தாங்கக்கூடிய எல்லைக்குள் வந்திருப்பதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததும் நல்ல செய்தியே. ஆனால், அடுத்தடுத்து வந்த செய்திகளால், மதியத்துக்கு மேல் நம் சந்தைகள் சரிந்தன. குறிப்பாக, அடுத்த நிதியாண்டில், நம் நிதிப் பற்றாக்குறை, ஜி.டி.பி.,யில் 5.10 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்த கணிப்பை, பலரும் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக, 'பிட்ச் ரேட்டிங்ஸ்' என்ற ஆய்வு நிறுவனம், இந்த அளவு மேலும் 0.30 சதவீதம் உயரும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த ஓராண்டில் நம் பணவீக்கம் 4.04 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஆண்டு அக்டோபரில் கணித்த பல்வேறு தொழில் நிறுவனங்கள், டிசம்பர் 2023ல் அதை 4.58 சதவீதமாக உயர்த்தியுள்ளன என்பது கவலைக்குரிய விஷயம். இன்று பணக்கொள்கைக் குழுவின் முடிவுகள் வெளியாகப் போகின்றன. வட்டி விகிதம் உயர்த்தப்படாது என்பதை வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் நம்புகின்றனர். ஆனால், சக்திகாந்த தாஸ் பேச்சில் வெளிப்படும் தொனியும், வார்த்தைகளும் முக்கியமானவை. குறிப்பாக, வட்டி விகிதத்தை எப்போது முதல் குறைக்கத் துவங்குவார் என்பதை சூசகமாகவேனும் புரிந்துகொள்ளும் முயற்சியில் வர்த்தகர்கள் இருக்கின்றனர். அதனால், சம்பாதித்த வரை போதும் என்ற மனநிலையோடு பலர் லாபப் பதிவில் இறங்கினர். சந்தை நேர முடிவில், தகவல் தொழில்நுட்ப பங்குகள் வீழ்ச்சி அடைய, பொதுத் துறை வங்கிகள், உலோகம், மின்சாரம், மருந்துகள், மனை வணிகப் பங்குகள் லாபம் ஈட்டின.
எஸ்.பி.ஐ., கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல் எச்.டி.எப்.சி., லைப் ஆக்சிஸ் வங்கி
டெக் மஹிந்திரா பவர் கிரிட் கார்ப்பரேஷன் இன்போசிஸ் அதானி போர்ட்ஸ் டி.சி.எஸ்.,
17-Feb-2026