மேலும் செய்திகள்
டிரெண்ட் மாற 25,200-ஐ தாண்டி நிறைவடைய வேண்டும்
03-Mar-2026
இந்திய பொருளாதாரத்தின் அசைக்க முடியாத துாண்
01-Mar-2026
சேலம் ஜவ்வரிசி நேரடியாக கனடாவுக்கு ஏற்றுமதி
21-Feb-2026
முந்தைய முடிவு : 22,122.05நேற்றைய முடிவு: 22,198.35மாற்றம்: 76.30 ஏற்றம் பச்சை
முந்தைய முடிவு: 72,790.13நேற்றைய முடிவு: 73,095.22மாற்றம்: 305.09 ஏற்றம் பச்சை
சரிவிலிருந்து மீண்டும் எழுந்துள்ளது, பங்கு சந்தை. இரண்டு நாட்களாக சரிவைக் கண்டு வந்த சந்தை நேற்று மீட்சியை கண்டது. டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ்., சன் பார்மா போன்ற பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டதும், உலக சந்தைகளின் சாதகமான போக்கினாலும் நேற்றைய தினம் இந்திய பங்கு சந்தை உயர்வைக் கண்டது சென்செக்ஸ் 305 புள்ளிகள் அளவுக்கு உயர்வை கண்டது. துவக்கத்தில் தள்ளாட்டம் போட்டு வந்த இக்குறியீடு பிற்பகுதியில் நிமிர்ந்தது. இதேபோல் நிப்டியும் இரண்டு நாட்கள் சரிவுக்கு பின் நேற்று 76 புள்ளிகள் அளவுக்கு உயர்வைக் கண்டது முன்னணி பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகமாக வாங்கியதை அடுத்தே சந்தை ஏற்றம் பெற்றது. மற்றபடி சந்தையை ஏற்றம் காண வைக்கும் அளவிலான நிகழ்வுகளோ செய்திகளோ எதுமில்லை. உலக அளவிலான சந்தைகளிலும் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தத்துக்கான வாய்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவை ஓரளவு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தது ஆசிய சந்தைகளான டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் ஆகிய சந்தைகள் பச்சையில் ஒளிர்ந்த நிலையில், சியோல் சந்தை மட்டும் சிவப்பை பூசிக்கொண்டது நிதி சேவைகள், தொலைதொடர்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளை சார்ந்த பங்குகள் அதிக சரிவைக் கண்டன. ஐரோப்பிய சந்தைகளும் ஏற்றம் கண்டன.
(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 40%இறக்கம் கண்டவை : 58%மாற்றம் காணாதவை: 2%
டாடா மோட்டார்ஸ் டி.சி.எஸ்., இண்டஸ்இண்ட் பேங்க் சன்பார்மா பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ஹீரோ மோட்டோகார்ப் பஜாஜ் பைனான்ஸ் எஸ்.பி.ஐ., டிவிஸ் லேப்ஸ் யு.பி.எல்.,
03-Mar-2026
01-Mar-2026
21-Feb-2026