உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

தடைபட்டது ஒரு வார உயர்வு

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன. தொடர்ச்சியாக, ஏழு நாட்கள் சந்தை குறியீடுகள் கண்ட உயர்வுக்கு, நேற்று தடை ஏற்பட்டது. மீண்டும் அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதன் காரணமாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின. அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பு வரும் ஏப்.,2ம் தேதி அமலாக உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாக வங்கி, ஐ.டி., மற்றும் மருந்து துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை விற்று, லாபத்தை பதிவு செய்தனர். மறுபுறம், நான்காம் காலாண்டு முடிவுகள் குறித்த நேர்மறை எதிர்பார்ப்பால், நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, சந்தையில் ஊசலாட்டம் நிலவியது. பிற்பகல் வர்த்தக நேரத்தின் போது, சந்தை குறியீடுகள் மளமளவென சரியவே, நிப்டி, சென்செக்ஸ் கிட்டத்தட்ட தலா 1 சதவீத சரிவுடன் நிறைவடைந்தன.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 2,241 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.58 சதவீதம் உயர்ந்து, 73.44 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா அதிகரித்து, 85.69 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை