உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ், நிப்டி 1 சதவீதம் சரிந்தன. ஈரானின் அணு ஆயுத வசதிகளை குறிவைத்து, இஸ்ரேல் தாக்குதல் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உலகளவில் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன. இந்திய சந்தைகளும் இதற்கு தப்பவில்லை. எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் கடும் சரிவு கண்டன. நேற்றைய சரிவால், முதலீட்டாளர்களுக்கு 5.98 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆமதாபாதில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான செய்தி வெளியானதும், பெரும்பாலான டாடா குழும நிறுவனங்களின் பங்கு விலை சரிந்தன. இதனிடையே, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தில் தனக்குள்ள 3.64 சதவீத பங்குகளை 7,703 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு இந்த பங்குகளை வாங்கியுள்ளது.

உலக சந்தைகள்

புதனன்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, தென்கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., உயர்வுடனும்; ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்சேங் சரிவுடனும் முடிவடைந்தன; ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின.

சரிவுக்கு காரணங்கள்

1 மத்திய கிழக்கில் பதற்றமான சூழல்2 உலக பொருளாதார வளர்ச்சி குறித்த கவலை

சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)

டாடா மோட்டார்ஸ் 2.98டைட்டன் 2.62டிரென்ட் 2.62

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 3,831 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை, நேற்று 1 பேரலுக்கு 1.43 சதவீதம் அதிகரித்து, 68.77 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா உயர்ந்து, 85.52 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை