உள்ளூர் செய்திகள்

பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 192 புள்ளிகள் குறைந்து, 77,415 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 73 புள்ளிகள் குறைந்து, 23,520 புள்ளியாக இருந்தது. நிதியாண்டின் கடைசி தினத்தில் சந்தை சரிவில் முடிவடைந்தாலும்,கடந்த நிதியாண்டில் நிகர அடிப்படையில் இரு குறியீடுகளும் 5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தன.அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து வரும் வர்த்தக வரிகளால் சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சயமற்றத்தன்மை தாக்கம் செலுத்தியது. எனினும், வெளிநாட்டில் நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

ஏறுமுகம் கண்ட பங்குகள்

1. கோடக் மகிந்திரா- 2,171.30 (1.88) 2. எச்.யூ.எல்.,- 2,259.35 (1.01) 3. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி- 1,348.40 (0.87)

இறங்குமுகம் கண்ட பங்குகள்

1. விப்ரோ- 262.25 (3.66) 2. இண்டஸ் இண்ட் பாங்க்- 649.85 (3.52) 3. ஸ்ரீராம் பைனான்ஸ்- 656.00 (3.32)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ