உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  குயிக் காமர்ஸ் துறையால் ஸ்டோரேஜ் தொழில் வளர்ச்சி

 குயிக் காமர்ஸ் துறையால் ஸ்டோரேஜ் தொழில் வளர்ச்சி

இ - காமர்ஸ் துறையின் வளர்ச்சியால், சேமிப்பு கிடங்குகளுக்கான இரும்பு அடுக்குகளை தயாரிக்கும் ஸ்டோரேஜ் துறைக்கு ஊக்கம் கிடைப்பதாக கோத்ரெஜ் நிறுவனத்தின் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் பிரிவு தலைவர் விகாஸ் சவுதா கூறுகிறார். அவர், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி. ஸ்டோரேஜ் துறையின் சந்தை மதிப்பு என்ன? மொத்தம் 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள துறை இது. ஆண்டுக்கு 10-12 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டின் மொத்த சந்தையில் 3ல் 1 பங்கை கோத்ரெஜ் வகிக்கிறது. இத்துறையின் வாடிக்கையாளர்கள் யார்? வழக்கமான சேமிப்பு கிடங்குகளே இத்துறையின் வாடிக்கையாளர்கள். தற்போது இ - காமர்ஸ், குயிக் காமர்ஸ் நிறுவனங்களின் வருகையால், இத்துறையின் தேவை அதிகரித்துள்ளது. எங்களது நிறுவனத்தின் வருவாயில் 35 சதவீதம், இத்தகைய நிறுவனங்கள் வாயிலாகவே கிடைக்கிறது. இந்த துறை சந்திக்கும் சவால்கள் என்னென்ன? இரும்பை மட்டுமே அடிப்படையாக கொண்ட தொழில் இது. மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இல்லை. ஆனால், மேற்காசிய போர்ச்சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் மூலப்பொருள் விலை அதிகரித்துவிட்டது. திறமையான ஊழியர் பற்றாக்குறை உண்டா? இப்போதைக்கு இல்லை. எதிர்காலத்தில் ஏற்படும். எனவே தான் இத்துறை நிறுவனங்கள் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கின் றன. அம்பத்துார் ஐ.டி.ஐ., வளாகத்திலேயே மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து எங்கள் தொழிற்சாலையில், பணியமர்த்துகிறோம். தமிழகத்தில் முதலீட்டை அதிகரிப்பீர்களா? ஆம். சென்னை அம்பத்துாரில் மிகப்பெரிய தொழிற்சாலையை 25 ஆண்டுகளாக இயக்கி வருகிறோம். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 400 கோடி ரூபாய் முதலீட்டில் இதற்கு இணையான ஆலையை சென்னையில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை