மேலும் செய்திகள்
அகர்பத்தி தயாரிப்புக்கு புதிய விதிகள் வெளியிட்டது பி.ஐ.எஸ்.,
23 hour(s) ago
இந்திய ஏலக்காய் ஏற்றுமதி 14,000 டன்னாக உயரும்
23 hour(s) ago
லக்னோ: உத்தர பிரதேசத்தில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்க டீமா எனும் தைவான் மின்சார மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகளவில் தைவான் நிறுவனங்களுக்கான சந்தையை விரிவுப்படுத்தவும், புவிசார் அபாயம், வினியோகம் தொடர்பான சவால்களை சமாளிக்க, அமெரிக்கா, இந்தியா, மெக்ஸிகோ மற்றும் போலந்தில் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து, உற்பத்தி மையங்களை அமைக்க டீமா முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, நான்கு இடங்களிலும், வினியோக தொடரை ஒருங்கிணைப்பதற்காக தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, நொய்டா அருகே யமுனா அதிவிரைவு நெடுஞ்சாலை ஒட்டிய தொழில்துறை மேம்பாட்டு ஆணைய பகுதியில், புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்க டீமா முயற்சித்து வருகிறது. மேலும், பிற மாநிலங்களுடன் பூங்கா அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஒப்பந்த அடிப்படையில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவரான யங் லியு, தற்போது டீமா அமைப்பின் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
23 hour(s) ago
23 hour(s) ago