சிறு தொழில் கடன் பெறுவதில் தமிழக நிறுவனங்கள் 2ம் இடம்
சென்னை : தேசிய அளவில் சிறு நிறுவன கடன் பெறுவதில் தமிழகம் இரண்டாவது பெரிய சந்தையாக திகழ்வதாக, சிட்பி எனும் இந்திய சிறு நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நபார்டு உள்ளிட்ட முறையான கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து, மொத்தம் 5 கோடி ரூபாய்க்கும் குறைவாக கடன் பெற்றுள்ள நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் என இந்த அறிக்கையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.