உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மூன்றாவது நாளாக தொடரும் சரிவு

மூன்றாவது நாளாக தொடரும் சரிவு

•வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் நிறைவடைந்தன•உலகளாவிய சந்தைகளில் கலவையான போக்கு காணப் பட்டது. அதன் தொடர்ச்சியாக, முற்பகல் வர்த்தகத்தின் போது, சற்று ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், பிற்பகல் வர்த்தகத்தின்போது, அதனை தக்க வைக்க முடியாமல், இரண்டு மாதங்களில் இல்லாத சரிவுடன் நிறைவு செய்தன•நிப்டி குறியீட்டில், தகவல் தொழில்நுட்பம், பொதுத்துறை வங்கி சார்ந்த பங்குகள் உயர்வு கண்டன. அதேசமயம், பார்மா, வாகன உற்பத்தி நிறுவனங்கள் பங்குகள் இறக்கத்தை சந்தித்தன. சென்செக்ஸ் குறியீட்டில், 2,185 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும், 1,743 பங்குகள் குறைந்தும், 101 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றி வர்த்தகமாகின•அன்னிய நிறுவன முதலீட்டாளர் கள் வெளியேற்றம், நிறுவனங் களின் இரண்டாவது காலாண்டு முடிவுகளில் ஏமாற்றம் காரணமாக சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பங்குகளை விற்று, முதலீட்டாளர் கள் லாபத்தை பதிவு செய்வது தொடர்கிறது.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---5,685 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர். கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.97 சதவீதம் குறைந்து, 75.30 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 1 பைசா அதிகரித்து 84.07 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை பஜாஜ் பைனான்ஸ் டெக் மஹிந்திரா டாடா கன்ஸ்யூமர் பஜாஜ் ஆட்டோ எச்.டி.எப்.சி.,வங்கிஅதிக இறக்கம் கண்டவை மஹிந்திரா & மஹிந்திரா சன் பார்மா ஐச்சர் மோட்டார்ஸ் ஸ்ரீராம் பைனான்ஸ் பவர் கிரிட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
அக் 24, 2024 07:22

அமெரிக்காவிலேயே அடுத்த வட்டி விகித குறைப்புக்கு ரெடியாயிட்டாங்க. இங்கேயும் வட்டியைக் குறைக்கணும். இல்லே இன்னொரு 20 லட்சம் கோடியை பேங்குகளுக்கு அள்ளி உடணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை