உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

83 சதவீதம்

இந்தியாவின் மொத்த டிஜிட்டல் கட்டணங்களில் யு.பி.ஐ.,யின் பங்கு, கடந்த 2024ல் 83 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.யு.பி.ஐ.,யின் பங்களிப்பு, கடந்த 2019ல் 19 சதவீதத்தில் இருந்து, 2024ல் 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், 2024ம் ஆண்டில் மட்டும், இந்தியா 20.85 கோடி டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது.

ரூ.74,000 கோடி

நடப்பு ஜனவரி மாதத்தில் இதுவரை, இந்திய பங்கு சந்தை முதலீடுகளில் இருந்து, 74,000 கோடி ரூபாயை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு அக்டோபர் மாதத்திற்கு பின், அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்ற மிகப்பெரிய மாதாந்திர பங்கு முதலீட்டு தொகையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை