உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

10 %உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் 10 சதவீதம் உயர்வு, உள்நாட்டு பணவீக்கத்தை 0.20 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை நம்பியிருப்பதை குறைத்து, புதைபடிவமற்ற மாற்று எரிசக்தி உற்பத்திக்கான கொள்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 36%இந்தியா தன் 166வது வருமான வரி தினத்தை நேற்று கொண்டாடிய வேளையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், வருமான வரி தாக்கல் 36 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2020 - 21ல் 6.72 கோடியாக இருந்த வருமான கணக்கு தாக்கல் எண்ணிக்கை,, 2024 - 25ம் நிதியாண்டில் 9.19 கோடியாக அதிகரித்து உள்ளது. இது, வரலாற்று அளவு உச்சமாகும். 1860ல் வருமான வரியை, சர் ஜேம்ஸ் வில்சன் அறிமுகப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ