மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
53 minutes ago
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
1 hour(s) ago | 8
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
3 hour(s) ago | 32
ஐதராபாத்: சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகள் மற்றும் ஓபலாபுரம் சுரங்க நிறுவனத்திற்கு சுரங்கப் பணிகளுக்கு நிலம் ஒதுக்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, கர்நாடக முன்னாள் அமைச்சர் கருணாகர ரெட்டியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
ஆந்திரா அனந்தபூர் மாவட்டம் ஓபலாபுரத்தில், சுரங்க நிறுவனங்கள் வைத்து நடத்தி வருபவர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி. இதில், ஜனார்த்தன ரெட்டிக்கு அதிகப் பங்கு உள்ளது. இவர்கள், சட்ட விரோதமாக சுரங்க நிறுவனங்கள் நடத்துவதாகவும், அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு சுரங்க கனிம வளங்களை அனுப்புவதாகவும், வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. ஆந்திராவில் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டியுடன் நெருக்கமாக இருந்ததால், இவர்களது நிறுவனங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராஜசேகர ரெட்டி விபத்தில் இறந்த பின், ரோசய்யா முதல்வரானார். அவர், இந்த புகார்களை விசாரணை செய்ய, சி.பி.ஐ.,க்கு அனுமதி வழங்கினார்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி, கர்நாடக ரெட்டி சகோதரர்களில் ஒருவரான, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஓபலாபுரம் சுரங்க நிறுவன மேனேஜிங் டைரக்டர் சீனிவாச ரெட்டி ஆகியோரது வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, ஜனார்த்தன ரெட்டி பயன்படுத்திய, 'ருக்மினி' ஹெலிகாப்டர், 4.5 கோடி ரொக்கப் பணம், 30 கிலோ தங்கத்தையும் கைப்பற்றினர். பின், இருவரையும் உடனடியாக சி.பி.ஐ., கைது செய்தது. கடந்த செவ்வாய் கிழமை ஜனார்த்தன ரெட்டியும், ஸ்ரீனிவாச ரெட்டியும் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட், இருவரையும் வரும் 19ம் தேதி வரை, சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், சுரங்க ஊழலில் தொடர்புடையவரும், ஜனார்த்தன ரெட்டியின் சகோதரரும், ஓபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் முன்னாள் இயக்குனருமான, கர்நாடக முன்னாள் அமைச்சர் கருணாகர ரெட்டியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் நேற்று காலை ஆஜரான கருணாகர ரெட்டியிடம், சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். ஏற்கனவே, தங்களின் காவலில் உள்ள ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஸ்ரீனிவாச ரெட்டியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று நான்காவது நாளாக அவர்களின் வழக்கறிஞர்கள் முன்னிலையில் விசாரணை நடத்திய நிலையில், கருணாகர ரெட்டியிடமும் விசாரணை நடைபெற்றது. அதுமட்டுமின்றி, கர்நாடக எம்.எல்.ஏ.,வும், ஜனார்த்தன ரெட்டியின் மற்றொரு சகோதரருமான சோமசேகர் ரெட்டியிடம் நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
53 minutes ago
1 hour(s) ago | 8
3 hour(s) ago | 32