உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லாலு கட்சி பிரமுகர் நிதிஷ் கட்சிக்கு தாவினார்

லாலு கட்சி பிரமுகர் நிதிஷ் கட்சிக்கு தாவினார்

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், லாலு பிரசாத் யாதவின் நம்பிக்கையை பெற்றவருமான ஷகீல் அமீத்கான், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் நேற்று சேர்ந்தார். ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவரும், பீகார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவருமான ஷகீல் அமீத்கான், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்னிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியில் நேற்று சேர்ந்தார். இதுகுறித்து ஷகீல் அமீத்கான் கூறுகையில், 'பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தலைமையும், அவரது பேச்சுத் திறமையும், சிறந்த நிர்வாகமும், சிறந்த திட்டமிடலும் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டன. எனவே, அவரது கட்சியில் இணைந்துள்ளேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ