டில்லி, மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்
புதுடில்லி: டில்லி, மும்பை நகரங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதால் உஷாராக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரியானா மாநிலம் அம்பாலாவில் கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.