உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொத்து குவிப்பு வழக்கு: துணை முதல்வர் சிவகுமார் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

சொத்து குவிப்பு வழக்கு: துணை முதல்வர் சிவகுமார் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கர்நாடக காங்கிரஸ் அரசில், துணை முதல்வராக இருப்பவர் சிவகுமார். 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை காங்., ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 73.94 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக, 2020ல் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவகுமார் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி, இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதனை எதிர்த்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பீலா எம். திரிவேதி, எஸ்.சி. சர்மா அடங்கிய அமர்வு விசாரித்தது. ‛‛உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இது குறித்து மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sankaranarayanan
ஜூலை 15, 2024 20:58

உலகிலேயே அரசியல்வாதிகள் மட்டுந்தான் சிறைச்சாலைகளிலிருந்தே அமைச்சராக இருந்தே ஆட்சி புரியலாம் ஜாமீனும் கொடுக்கப்பட்டு எல்லா தடைகளும் ரத்து ஆகிவிடும் இதை உலக நாடுகள் இனிமேல் இந்த உச்ச நீதி மன்ற தனிப்பட்ட உத்திரவுகளை பின்பற்றவேண்டும் உலகம் முன்னேறும்


தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2024 20:14

சிவகுமார் தான் அடுத்த செந்தில் பாலாஜி.


GoK
ஜூலை 15, 2024 19:11

அவ்வளவுதானா?


P Karthikeyan
ஜூலை 15, 2024 18:05

கெஜ்ரிவால் இன்னும் எப்படி முதல்வராக நீடிக்கிறார் ... உச்சநீதிமன்ற ஆசிகள் அவருக்கு மற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு உள்ளது போலும்


வாய்மையே வெல்லும்
ஜூலை 15, 2024 17:26

ஆடிய ஆட்டத்தில் மரியாதையா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவேண்டியது தான் சிவகுமாரின் வேலையாக இருக்கும் . தமிழகத்துக்கு தண்ணீர் அனுப்புவது முட்டுக்கட்டை போடும் முதல் நபர் இந்த ஆளு தான் .


cbonf
ஜூலை 15, 2024 16:39

“உயர் பதவியில் இருப்பவர்கள் குற்றங்களை” தாமதமின்றி தண்டிக்க 'குற்றப் புலனாய்வு அமைப்பு' மற்றும் 'நீதி அமைப்பு' பெருமளவில் நவீனப்படுத்தப்பட வேண்டும். 15 ஆண்டுகள் ஆகியும் - தாய் மகன் இருவரையும் கைது செய்ய நமது நீதிமன்றங்கள் பரிதாபமாகத் தவறிவிட்டன.


cbonf
ஜூலை 15, 2024 16:39

டி.கே.க்கு சொந்தமான 125 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது. ஆனால் இதுவரை அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை.


RAAJA 69
ஜூலை 15, 2024 16:17

சந்தோஷும் தான். தன்னுடய பதவிக்கு இனி ஆபத்து இல்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை