உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரெட்பிக்ஸ் சேனலை மூடும்படி பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

ரெட்பிக்ஸ் சேனலை மூடும்படி பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சென்னையை சேர்ந்த, 'யு டியூபர்' பெலிக்ஸ் ஜெரால்டின், 'ரெட்பிக்ஸ் 24x7' சேனலை மூடும்படி, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.சென்னையை சேர்ந்த பெலிக்ஸ் ஜெரால்டு, 'ரெட்பிக்ஸ் 24x7' என்ற யு டியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில், மற்றொரு யு டியூப் சேனலை நடத்தி வரும் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி, ஏப்., 30ல் ஒளிபரப்பானது. அதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் குறித்து சவுக்கு சங்கர் சில தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து, சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கின. ஆனால், மற்றொரு வழக்கில் தமிழக போலீசார், சங்கரை கடந்த மாதம் 12ல் கைது செய்தனர். இதை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அது நிலுவையில் உள்ளது.இந்நிலையில், யு டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் அளித்தது. அதில் ஒரு நிபந்தனையாக, அவர் நடத்தி வரும், 'ரெட்பிக்ஸ்' சேனலை மூடும்படி உத்தரவிட்டது.இதை எதிர்த்து பெலிக்ஸ் தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 'நீதித்துறை மற்றும் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கேவலமான குற்றச்சாட்டுகளை கூறுகிறீர்கள். ஏன் இப்படிப்பட்ட நேர்காணல்களை நடத்துகிறீர்கள்?' என, அமர்வு கேள்வி எழுப்பியது.''அது போன்ற நேர்காணல்களை ஒளிபரப்பி இருக்கக் கூடாது,'' என, பெலிக்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார். மேலும், சேனலுக்கு 24 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாகவும், அதை மூடும்படி உத்தரவிட்டது சற்று கடுமையானது என்றும் வாதிட்டார்.இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்ட நீதிமன்றம், 'ரெட்பிக்ஸ்' சேனலை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைக்கு, தடை விதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAMAKRISHNAN NATESAN
செப் 07, 2024 01:19

யூடியூபர்களுக்கு வேண்டும் கடிவாளம் ..... இர்ஃபானை சட்டம் தொட்டுப்பார்க்கக் கூட முடியவில்லை ....


புதிய வீடியோ