உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் எலி காய்ச்சல் மரணங்கள்...அதிகரிப்பு!

கேரளாவில் எலி காய்ச்சல் மரணங்கள்...அதிகரிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம், : கேரளாவில் இந்தாண்டில் மட்டும் இதுவரை, 121 பேர் எலி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் இருக்கும்படி மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதைத் தவிர, 1,935 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2022ல் இந்த காய்ச்சலுக்கு 93 பேரும், 2023ல் 103 பேரும் கேரளாவில் பலியாகி உள்ளனர். ஆனால், இந்தாண்டு இன்னும் எட்டு மாதங்களே முடிவடையாத நிலையில், 121 பேர் பலியாகி உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எலிக் காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதனால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கவனமுடனும், விழிப்புடனும் இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அறிகுறிகள்

இந்த தொற்று, எலி மற்றும் நாய் போன்றவற்றின் சிறுநீர், எச்சங்கள் வாயிலாக மனிதர்களுக்கு பரவக் கூடியது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு கடுமையான காய்ச்சல், தலை வலி, தசை வலி, வாந்தி, அடிவயிறு வலி ஆகிய அறிகுறிகள் தென்படும். சிலருக்கு அறிகுறிகள் தென்படாது. இந்த பாதிப்பு, குறைந்தபட்சம் இரண்டு நாட்களில் இருந்து, அதிகபட்சம் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் மருந்துகள் வாயிலாக இதை குணப்படுத்த முடியும். உரிய நேரத்தில் கவனிக்க தவறினால், சிறுநீரகத்தை பாதித்து, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கேரளாவில் பாதிப்பு ஏன்?

சமீபகாலமாக கேரளாவில் பல்வேறு வகை காய்ச்சல்கள் அதிகரித்து வருகின்றன. பன்றி காய்ச்சல், மேற்கு நைல் மூளை காய்ச்சல், குரங்கு காய்ச்சல், ஜப்பான் மூளை காய்ச்சல், டெங்கு, நிபா, எபோலா, ஆந்த்ராக்ஸ் என, தொடர்ந்து அச்சுறுத்தும் விதவிதமான காய்ச்சல்களால், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளா, வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகளை அதிகமாக கொண்டுள்ளதால், இங்கு கால்நடை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக புவியியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆடு, மாடு, குரங்கு, வவ்வால் என பல்வேறு விதமான விலங்குகளின் எச்சம் மற்றும் கழிவுகள் வாயிலாக, நாள்தோறும் ஏராளமான வைரஸ்கள் பரவுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பருவமழையின் தாக்கம் அதிகம் இருப்பதால், வைரஸ் பரவல் அதிகரித்து, பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இயற்கையான இருப்பிடங்களை தொலைத்த வவ்வால், காட்டுப் பூனை உள்ளிட்ட உயிரினங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு படையெடுப்பதால், இது போன்ற காய்ச்சல்கள் பரவுவதாக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கேரளாவில் வசிக்கும் பலர் உயர் கல்விக்காகவும், தொழில் நிமித்தமாகவும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக மருத்துவம், செவிலியர் தொடர்பான பணிகளை செய்யும் அவர்களை பாதிக்கும் வைரஸ்கள், கேரளாவிலும் எளிதில் நுழைந்து விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் பரவிய தொற்று 1கேரளாவில் நிபா வைரஸ் பரவல், 2018ல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆண்டு மட்டும்    அதிகபட்சமாக 17 பேர் இந்த வைரசுக்கு    பலியாகியுள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளில்,   நான்கு முறை இந்த காய்ச்சல் பரவியுள்ளது. 2முதல் குரங்கு காய்ச்சல் பாதிப்பு, 2022 ஜூலையில் கொல்லம் மாவட்டத்தில்    கண்டுபிடிக்கப்பட்டது. 3 கடந்த 2022ல் திருச்சூரில் ஆந்த்ராக்ஸ் பரவல் கண்டுபிடிப்பு.4 கடந்த 2022ல் எலிக் காய்ச்சல் மற்றும் பூச்சிக்கடியால் ஏற்படும் ஸ்க்ரப் டைபஸ்    காய்ச்சல் கண்டுபிடிப்பு. ௫ கடந்த 2023ல் பன்றிக் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.6 கொரோனா பரவல் சமயத்தில் அதிகளவு உயிரிழப்புகள் பெரும்பாலும் கேரள     மாநிலத்திலேயே ஏற்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ram pollachi
ஆக 25, 2024 10:46

எண்ணம் சரியாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும்... பூனை, நாய், இதர பிராணிகளை வளர்த்துகிறேன் என்று அட்டை பெட்டி, கூடை மற்றும் கார்களில் கொண்டு சென்று அவற்றின் எச்சம், மிச்சம், ரோமங்களை அடுத்த வீட்டின் கூரை, பொது இடங்கள், கால்வாய்களில் வீசி பாதிப்பை உண்டாக்குவது இவர்களின் பொழுதுபோக்கு, பலமுறை சொல்லியும் கேட்காத அதிமேதாவி கூட்டம். பட்டாலும் புரியாது, கெட்டாலும் உணராத ஜென்மம். இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் வடகிழக்கு மாநில மக்கள் தயவுசெய்து சரிபார்க்கவும்....


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2024 10:17

கொரோனா முதலில் மர்ம நபர்கள் டில்லியில் பரப்பினர் என்றால் தென்னகத்தில் கேரளத்தினர் , பின்னர் எம்பாக்ஸ் என்ற கொடும்வியாதி , இப்போ இந்த காய்ச்சல் ? இந்தியாவின் வைரஸ் கேந்திரம் என்றால் அது கேரளம் தானோ ?


வாசகர்
ஆக 25, 2024 09:08

இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள் இருக்கும் இடம். ஆனால் வியாதி வித விதமாக வருவது இங்கு தான், ஏன் அதுதான் கர்மா, தமிழ் நாட்டிலிருந்து மண் வளங்களை அள்ளி கொண்டு திரும்பி வரும் லாரியில் அவுங்க குப்பையை, மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து தமிழ் நாட்டில் கொட்டினால் இப்படித்தான் வரும்.கேரளாவை தாங்கி நிற்கும் கால்கள் போல தமிழகம் உள்ளது. கால்கள் நல்லா இருந்தால் தான் தேகம் நல்லா இருக்கும். நம்ம சேட்டன்கள் என்று உனருவுர்களொ?


sridhar
ஆக 25, 2024 08:20

கலாச்சார மற்றும் உணவு பழக்க மாற்றங்கள் / சீரழிவுகள் கடந்த நூறு வருடத்தில் கேரளாவில் அதிகம் . மற்றபடி காடு மலை காரணம் இல்லை .. இதை விட அதிகமான காடு மலை இடங்களில் இப்படி இல்லை.


முக்கிய வீடியோ