உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தியில் கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பதி தேவஸ்தான குழு அறிக்கை

அயோத்தியில் கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பதி தேவஸ்தான குழு அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி:உத்தர பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆலோசனை அறிக்கையை, திருமலை திருப்பதி தேவஸ்தான குழு வழங்கியது-.உத்தர பிரதேசம் அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டது.இந்த கோவிலின் சிலை பிரதிஷ்டை விழா, கடந்த ஜன., 22ல் நடந்தது.உலகம் முழுதும் இருந்து ஏராளமானோர் நாள்தோறும் அங்கு வருகை தந்து, குழந்தை ராமரை தரிசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் சூழலில், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆந்திராவில் உள்ள ஏழுமலையான் கோவிலின் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.அறக்கட்டளையின் வேண்டுகோளை ஏற்று, திருப்பதி தேவஸ்தான குழு அதிகாரிகள் சமீபத்தில் அயோத்தி ராமர் கோவிலில் ஆய்வு செய்தனர்.இதன் தொடர்ச்சியாக, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, தொழில்நுட்ப ஆலோசகர் ராமசந்திர ரெட்டி மற்றும் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.அப்போது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை அறிக்கை ராமர் கோவில் நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.இதில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை நிர்வகித்தல், வரிசை முறையை ஒழுங்குபடுத்துதல், உள்ளே செல்லுதல் மற்றும் வெளியேறும் வழிகள் குறித்த ஆலோசனைகள், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அடங்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sri
ஏப் 16, 2024 14:23

திருப்பதி மாடலில் காத்திருப்பு அதிகம் அதை தயவு செய்து பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்


aaruthirumalai
ஏப் 15, 2024 16:02

1.5 மணிநேரத்தில் சாமி தரிசனம் கிடைத்தது. இவர்கள் புகுந்தால் 7.5 மணிநேரமாக மாறலாம்.


K V Ramadoss
ஏப் 15, 2024 15:41

உண்மை திருப்பதியில் தான் அமைதியாக தரிசனம் செய்ய வசதி வேண்டும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 15, 2024 05:04

நல்ல வேளை அன்றே திருப்பதி வேண்டுமா அல்லது சென்னை வேண்டுமா என்ற கேள்வி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கேட்டதற்கு சென்னை போதும் திருப்பதி வேண்டாம் என கூறி திராவிட கட்சிகள் நல்லது செய்தனர்


Indhuindian
ஏப் 15, 2024 04:59

அயோத்தியில் கூட்டம் வஷியூது ஆனா ஒருத்தரும் கம்பிளான்ட் பண்றதில்லை பிர்லா சாத்திரம் எதிரே வரிசையில் போனா ஒரு ஒரு கிலோமீட்டர் நடந்து போயி அதே இடத்துக்கு நாப்பது நிமிஷத்துல வந்துடலாம் யாரும் யாரையும் விரட்டறதுல்லே ஜருகண்டி ஜருகண்டி கிடையாது பிடிச்சி தள்ளறது கிடையாது காட்டு கூச்சல் போடற கோயில் சிப்பந்திகள் கிடையாது எல்லோரையும் மரியாதையாக நடத்துகிறார்கள், கூண்டுல அடைகிறது இல்ல இத்தனைக்கும் கூட்டம் திருப்பதி போல மூணு மடங்கு இடம் விசாலமா இருக்கு தரிசனம் அமோகமா செய்யலாம் நீங்க ஆலோசனை சொல்லாமலே இருந்த போதும் இது இரண்டு மாதங்களுக்கு முன்னால் மூன்று நாள் தங்கி இருந்து ஆறு முறை தரிசனத்துக்கு சென்று வந்து இந்த பதிவு


Radhakrishnan Seetharaman
ஏப் 15, 2024 00:00

வேறென்ன, ஜருகண்டி ஜருகண்டி தான்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ