உள்ளூர் செய்திகள்

தேசியம்

சேவை செய்ய விருப்பம்!ஒரு தாய், எப்படி தன் குழந்தைகளை பார்த்துக்கொள்வாரோ, அதுபோல் வயநாடு தொகுதி மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். வயநாடு மக்களின் நலனுக்காக பார்லிமென்டில் குரல் எழுப்புவேன். இங்குள்ள மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பர் என உறுதியாக நம்புகிறேன். பிரியங்காபொதுச்செயலர், காங்கிரஸ்உறவே கிடையாது!பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ள என் உறவினர் அஜித் பவாருடன், அரசியல் ரீதியில் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை. அவருக்கும், எங்கள் கட்சிக்கும் எந்த உறவும் கிடையாது. மஹாராஷ்டிரா முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை.சுப்ரியா சுலேஎம்.பி., தேசியவாத காங்., சரத் பவார் பிரிவுசட்டவிரோத தீர்மானம்!ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது. சிறப்பு அந்தஸ்தை திரும்ப கொண்டுவர வேண்டும் என, காஷ்மீர் சட்டசபையில் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம், அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஸ்மிருதி இரானிமுன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை