உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்னி வீரர்களுக்கு போலீஸ் உள்ளிட்ட பணிகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு

அக்னி வீரர்களுக்கு போலீஸ் உள்ளிட்ட பணிகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹரியானா: 'அக்னி வீரர்களுக்கு போலீஸ் கான்ஸ்டபிள், சுரங்க காவலர் உள்ளிட்ட பணிகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்' என, ஹரியானா அரசு அறிவித்துள்ளது. ராணுவத்தில், 'அக்னி வீர்' என்ற புதிய திட்டத்தை 2022ல் மத்திய அரசு அறிவித்தது.இந்த திட்டத்தின் வாயிலாக, மூன்று படைப்பிரிவுகளிலும், நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் அக்னி வீரர்கள் பணியமர்த்தப்படுவர். இதில், 25 சதவீதத்தினருக்கு மட்டுமே, மேலும் 15 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அக்னி வீரர்களுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணிகளில், 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஹரியானா அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, முதல்வர் நயாப் சிங் சைனி கூறியுள்ளதாவது: கான்ஸ்டபிள், சுரங்கக் காவலர், வனக்காவலர், சிறைக்காவலர் மற்றும் சிறப்பு காவல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு, நேரடி ஆட்சேர்ப்புகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.குரூப் 'சி' பதவிகளில் அவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு தரப்படும். குரூப் 'சி' மற்றும் 'டி' பணியிடங்களில் மூன்று ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும். அக்னி வீர் திட்டத்தின் முதலாமாண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த தளர்வு ஐந்து ஆண்டுகளாக இருக்கும்.சொந்த தொழில் துவங்க விரும்புவோருக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். அக்னி வீர் திட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்த பின், அவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

மோகனசுந்தரம்
ஜூலை 18, 2024 11:34

இது ஒரு அருமையான திட்டம். இதை சரியானவர்களால் மக்களுக்கு புரிய வைக்கப்பட வேண்டும். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் இப்பணிக்கு போவது மிக மிக நன்று.


Kasimani Baskaran
ஜூலை 18, 2024 05:34

இராணுவப்பயிற்சி, நல்லொழுக்கம் ஆகியவை கற்றுணர்ந்த அக்னிவீரர்கள் எல்லா வேலையிலும் நுழைந்தால் மொத்த திராவிட கோட்ப்பாடும் மதிப்பிழந்து விடும் . அதனால்தான் அவர்களுக்கு முன்னுரிமை தமிழகத்தில் தர வாய்ப்பில்லை.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ