உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை செல்ல அனுமதி 10 வயது சிறுமி கோரிக்கை

சபரிமலை செல்ல அனுமதி 10 வயது சிறுமி கோரிக்கை

திருவனந்தபுரம்,கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தன்னை சபரிமலை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டுமென திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இதை தேவசம் போர்டு நிராகரித்திருந்தது. சிறுமியின் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருந்ததாவது:எனக்கு 10 வயது ஆகிறது. இதுவரை மாத விலக்கு துவங்கவில்லை. 10 வயது ஆவதற்கு முன்பே என்னை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல என் தந்தை திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதாலும், கொரோனா பரவல் மற்றும் பண நெருக்கடி காரணமாக சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அனைத்து கட்டுப்பாடுகளையும் மதித்து சபரிமலை தரிசனம் செய்ய தயாராக இருக்கிறேன். எனவே, 10 வயது என்ற நிபந்தனையை தளர்த்தி எனக்கு தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், ஹரிசங்கர் வி மேனன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது.இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள், 'சபரிமலையில் 10 முதல், 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தரிசனம் செய்யக்கூடாது என்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முடிவில் தலையிட முடியாது' என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை