உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருந்து தொழிற்சாலையில் ரூ.107 கோடி போதை; 4 பேர் கைது

மருந்து தொழிற்சாலையில் ரூ.107 கோடி போதை; 4 பேர் கைது

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எம்.டி., மருந்து தொழிற்சாலையில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.இம்மருந்து தொழிற்சாலையில் போதைப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. சட்ட விரோதமாக மருந்து தொழிற்சாலை இயங்கி வருவதாகவும், போதைப்பொருட்கள் கடத்தலை தடுத்து நிறுத்துமாறும் மும்பை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில் மருந்து தொழிற்சாலையில் நேற்று மும்பை போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ. 107 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆலை நிர்வாகத்தினரிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ