மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13
லே, லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்தியா - சீனா எல்லையில், 108 கிலோ தங்கக் கட்டிகளை கடத்த முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள சங்க்தங்க் அருகே, நேற்று முன்தினம் பகலில் இந்திய - சீன எல்லை பகுதியில் கழுதைகளுடன் இருவர் நம் பகுதிக்குள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை பாதுகாப்பு படையினர் விரட்டிச் சென்று பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், மருந்து தாவரங்களை சேகரிக்க வந்ததாக தெரிவித்தனர். சந்தேகத்தில் அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இருவரிடம் இருந்தும் தலா 1 கிலோ எடையுள்ள 108 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர, இரண்டு மொபைல் போன்கள், பைனாக்குலர், இரு கத்திகள் மற்றும் கேக்குகள், பால் உட்பட சீனா உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இவை தொடர்பாக, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படை வரலாற்றிலேயே முதன்முறையாக மிகப் பெருமளவில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்டவர்கள் லடாக்கின் நியோமா பகுதியைச் சேர்ந்த செரிங் சம்பா, 40, மற்றும் ஸ்டான்சின் டோர்கியால் என தெரிய வந்துள்ளது. கடத்தலில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் போலீசார் மற்றும் இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago | 5
6 hour(s) ago | 1
9 hour(s) ago | 13