உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிக மகசூல் தரும் 109 வகை விதைகள்; அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

அதிக மகசூல் தரும் 109 வகை விதைகள்; அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

புதுடில்லி : பண்ணை உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அதிக மகசூல் மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற, உயிர் வலுவூட்டப்பட்ட 109 வகை விதைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிமுகப்படுத்தினார்.

வலியுறுத்தல்

நரேந்திர மோடி, 2014ல் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்தே, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நிலையான விவசாய நடைமுறைகள் மற்றும் தட்பவெப்ப எதிர்ப்பு முறைகளை ஆதரித்து வருகிறார்.மேலும், உயிர் வலுவூட்டப்பட்ட பயிர்களை தொடர்ந்து ஆதரித்து வருவதுடன், அவற்றை அரசின் மத்திய உணவு, அங்கன்வாடி உணவு திட்டங்களுடன் இணைக்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.அந்த வகையில், அதிக மகசூல் மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற, உயிர் வலுவூட்டப்பட்ட 109 விதை வகைகளை பிரதமர் மோடி டில்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார்.இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இந்த விதைகளை உருவாக்கி உள்ளது. அதில், விவசாயம் சார்ந்து 34 விதைகளும், தோட்டக்கலை சார்ந்து 27 விதைகளும் இடம் பெற்றுள்ளன.

நம்பிக்கை

இந்த அறிமுக நிகழ்வின் போது, விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது, தினை உணவின் முக்கியத்துவம் குறித்து விவரித்த பிரதமர் மோடி, மக்கள் சத்தான உணவின் மீது அதிக அக்கறை காட்டுவதையும் குறிப்பிட்டு பேசினார். இயற்கை விவசாயத்தின் நன்மைகள் மற்றும் அதன் மீது மக்களுக்கு அதிகரித்து வரும் நம்பிக்கை குறித்தும் பிரதமர் ஆர்வமுடன் விவாதித்தார்.பிரதமர் அறிமுகப்படுத்திய வேளாண் பயிர் வகைகளில் தானியங்கள், தினைகள், தீவனப் பயிர்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி மற்றும் நார் பயிர்கள் இடம் பெற்று இருந்தன. தோட்டக்கலை பயிர் வகைகளில் பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், மசாலாப் பொருட்கள், பூக்கள் மற்றும் மருத்துவ தாவரங்கள் இடம் பெற்று இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை