உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதையில் வாகனம் ஓட்டிய 12,000 பேருக்கு அபராதம்

போதையில் வாகனம் ஓட்டிய 12,000 பேருக்கு அபராதம்

புதுடில்லி:'ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை மது போதையில் வாகனம் ஓட்டிய 12,468 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகம்' என டில்லி மாநகரப் போலீஸ் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்த ஆண்டில் ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை மதுபோதையில் வாகனம் ஓட்டிய 12,468 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 9,837 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுய் இருந்தது. இந்த ஆண்டு 27 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு அதிகபட்சமாக ரஜோரி கார்டன் சர்க்கிளில் 770, சமய்பூர் பட்லி சர்க்கிளில் 514 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ரோஹினி - 441, பஞ்சாபி பாக் - 387, மெஹ்ராலி - 367, மயூர் விஹார் - 364, நரேலா சர்க்கிள் - 364, கல்காஜி - 344, கரோல் பாக் - 342 மற்றும் சதர் பஜார் - 342 பேருக்கு மது போதையில் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தை தடுக்க சோதனைகள் அதிகரிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்