உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி அரசுப் பள்ளியில் 1,414 பேர் நீட் தேர்ச்சி

டில்லி அரசுப் பள்ளியில் 1,414 பேர் நீட் தேர்ச்சி

புதுடில்லி:“டில்லி அரசுப் பள்ளிகளில் இருந்து 1,414 மாணவர்கள் இந்த ஆண்டு 'நீட்-' தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்,” என, கல்வி அமைச்சர் அதிஷி கூறினார்.இதுகுறித்து, அதிஷி நேற்று கூறியதாவது:இளநிலை மருத்துவப் படிப்புக்காகன் 'நீட்' எனப்படும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வில், டில்லி அரசுப் பள்ளி மாணவர்கள் 1,414 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டில் 569 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். அதைவிட இந்த ஆண்டு இரண்டரை மடங்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி