உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு வெளிவட்ட சாலையில் 15 முதல் அரசு பஸ்கள் இயக்கம்

மைசூரு வெளிவட்ட சாலையில் 15 முதல் அரசு பஸ்கள் இயக்கம்

மைசூரு: மைசூரு வெளிவட்ட சாலையில் உள்ள லே- -- அவுட்டுகளில் வசிக்கும் மக்கள் வசதிக்காக, வரும் 15ம் தேதிக்கு பின், கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.மைசூரு நகருக்குள் சுற்றுலா பயணியர் எளிதாக செல்லும் வகையில், 42 கி.மீ., துாரத்திற்கு வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில், தற்போது ஏராளமான லே -- அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஏராளமான மக்கள் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர்.ஆனால் வெளிவட்ட சாலையில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், வெளிவட்ட சாலைகளில் வசிப்போர், வேறு இடத்திற்கு செல்வதற்கு தனியார் வாகனங்களை நாட வேண்டியுள்ளது. இதை பயன்படுத்தி, தனியார் வாகனங்களின் உரிமையாளர்களும் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.இதையடுத்து வெளிப்பட்ட சாலைகளில் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என, கடந்த 2018 முதல் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த கோரிக்கையை தற்போது கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. வரும் 15ம் தேதிக்கு பின், வெளிவட்ட சாலைகளின் உள்ள பகுதிகளையும், நகரையும் இணைக்கும் வகையில் 16 கே.எஸ்.ஆர்.டி. சி., பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்