உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.20 லட்சம் கடன் வாங்கி வியாபாரியிடம் மோசடி

ரூ.20 லட்சம் கடன் வாங்கி வியாபாரியிடம் மோசடி

பெங்களூரு: இரும்பு வியாபாரியிடம் வாங்கிய 20 லட்சம் ரூபாய்க்காக நகல் எடுத்த நோட்டுகளை கொடுத்து மோசடி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.பெங்களூரு காட்டன்பேட்டில் வசிப்பவர் கார்த்திக், 35; இரும்பு வியாபாரி. வியாபாரத்திற்காக கடந்த ஆண்டு டில்லி சென்றபோது, பரத், 38, என்பவரின் அறிமுகம் கிடைத்தது. நண்பர்கள் ஆகினர். அடிக்கடி மொபைல் போனிலும் பேசினர்.சில மாதங்களுக்கு முன், கார்த்திக்கிடம் மொபைல் போனில் பேசிய பரத், “எனக்கு அவசரமாக 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. பெங்களூரில் உள்ள எனது உறவினர் மூலம், பணத்தை திரும்ப தர ஏற்பாடு செய்கிறேன்,” என்று கூறினார். இதற்கு சம்மதித்த கார்த்திக், பரத்திற்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்தார்.கடந்த 1ம் தேதி கார்த்திக்கிடம், மொபைல் போனில் ஒருவர் பேசினார். தன் பெயர் ரமாகாந்த் என்றும், பரத்தின் உறவினர் என்றும் கூறினார்.“பரத் உங்களுக்கு தர வேண்டிய 20 லட்சம் ரூபாயை, சிக்பேட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்து வாங்கிக் கொள்ளுங்கள்,” என்றார்.அன்றைய தினமே, சிக்பேட்டிற்கு கார்த்திக் சென்றார். அவரை சந்தித்த ரமாகாந்த், ஒரு பண்டலை கொடுத்தார். இதற்குள் பணம் இருக்கிறது என்று கூறிவிட்டு கிளம்பினார். பின், பரத்திற்கு, கார்த்திக் மொபைல் போனில் பேசினார்.அப்போது, “பண்டலை பிரித்துப் பார்க்க வேண்டாம்,” என, பரத் திரும்ப, திரும்ப கூறினார். கார்த்திக்கிற்கு சந்தேகம் ஏற்பட்டது. பண்டலை பிரித்து பார்த்தபோது, கலர் நகல் ரூபாய் நோட்டுகள் இருந்தன.அதிர்ச்சி அடைந்த அவர் பரத்தை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது. தன்னை ஏமாற்றியது குறித்து பரத், ரமாகாந்த் ஆகிய இருவர் மீதும், சிக்பேட் போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் கார்த்திக் புகார் செய்தார்.இருவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை