உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 24 மணி நேரம் கண்காணிப்பு

24 மணி நேரம் கண்காணிப்பு

கர்நாடக சிறைத்துறை வடக்கு மண்டல டி.ஐ.ஜி., சேஷா, பல்லாரி சிறையின் தலைமை கண்காணிப்பாளருக்கு பிறப்பித்துள்ள உத்தரவு விபரம்: பெங்களூரு மத்திய சிறையில் இருந்து, பல்லாரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள விசாரணை கைதி தர்ஷனை, தனி அறையில் அடைக்க வேண்டும். அவரது செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில், 24 மணி நேரமும் 'சிசிடிவி' கேமராக்கள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை, முன்னெச்சரிக்கையாக தினமும் சேகரித்து வைத்து கொள்ள வேண்டும் அவரை கண்காணிக்க தலைமை ஏட்டு அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் தலைமை கண்காணிப்பாளர் உட்பட உயர் அதிகாரிகள், தினமும் அவரது செயல்பாட்டையும், பாதுகாப்பு ஏற்பாட்டையும் கண்காணித்து, ஊழியர்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்த வேண்டும் அவர் தங்கியுள்ள அறையை தினமும் திறக்கும் போதும், அடைக்கும் போதும், முழுமையாக சோதனை செய்ய வேண்டும் ஷிப்ட் மாறும் போது, பாதுகாப்பு ஊழியர்கள் முழுமையாக சோதனை செய்ய வேண்டும் பாதுகாப்பு ஊழியர்கள், பாடி கேமராக்கள் பொருத்தி கொண்டு, அவரின் செயல்பாடுகளை பதிவு செய்து, சிறை உயர் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் தற்காலிகமாக, அவரது மனைவி, ரத்த சம்மந்தப்பட்ட உறவினர்கள், வழக்கறிஞர்களை மட்டுமே, அவரை பார்க்க விதிமுறைப்படி அனுமதிக்க வேண்டும் கன்னட திரைத்துறையினர், ரசிகர்கள், அரசியல் புள்ளிகள் வர வாய்ப்பு உள்ளதால், அவர்களை அனுமதிக்க கூடாது அவருக்கு சிறப்பு வசதிகள் கிடைத்ததால், ஊடகங்களில் வெளியாகி, அரசு மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சாதாரண கைதிக்கு வழங்கப்படும் வசதிகள் தவிர, சிறப்பு வசதிகள் செய்து தர கூடாது உணவு, பொழுதுபோக்கு வசதிகளை, சிறை விதிமுறைப்படி மட்டுமே வழங்க வேண்டும். விதிமுறை மீறி செயல்பட கூடாது அவ்வப்போது திடீரென அவரது அறையை சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவரை சந்திக்க வரும் நபர்களை, சிறை பாதுகாப்பு ஊழியர் மட்டுமின்றி, கர்நாடக தொழில் பாதுகாப்பு பிரிவு போலீசாரும் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வந்துள்ளனரா என்று சோதனை நடத்த வேண்டும் அவர் பிரபல நபர் என்பதால், சிறை முன், ரசிகர்கள் பிரச்னை செய்யும் வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கையாக, உயர் போலீஸ் அதிகாரிகள் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை