உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 24 முதல் 26 வரை 144 தடை உத்தரவு

24 முதல் 26 வரை 144 தடை உத்தரவு

பெங்களூரு : 'லோக்சபா தேர்தலை ஒட்டி, ஏப்., 24ம் தேதி மாலை 6:00 மணி முதல் 26ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது' எனபெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் முதல் கட்டமாக, 14 தொகுதிகளுக்கு வரும் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:லோக்சபா தேர்தலை ஒட்டி, பெங்களூரில் வரும் 24ம் தேதி மாலை 6:00 மணி முதல் 26ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரையிலும்; ஓட்டு எணணிக்கை தினமான ஜூன் 4ம் தேதி காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.இந்நேரத்தில் வேட்பாளரோ அல்லது அவரது ஆதரவாளர்களோ ஐந்து நபருக்கு மேல் சேரக்கூடாது. ஊர்வலம், கூட்டம் நடத்தக்கூடாது. உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சுத்தியல், வாள், சூலம், துப்பாக்கி, கத்தி, லத்தி, தடி எதையும் பயன்படுத்த கூடாது.கற்கள், வெடி பொருட்கள், தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது, சேர்த்து வைப்பதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. ஓட்டுச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடைகள், சைபர் கபேக்கள், புத்தக கடைகள் மூடப்படும்.மொபைல் போன்கள், சாட்டிலைட் போன்கள் அல்லது பிற எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுவரொட்டிகள், பேனர்கள் அல்லது பிரசாரம் தொடர்பான பொருட்கள், ஒலி பெருக்கிகள் பயன்படுத்த கூடாது.எந்தவொரு நபரின் ஜாதி, மதம் அல்லது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு நாளன்று, ஓட்டுச்சாவடிகளுக்குள் ஊடகத்தினர் புகைப்படம் எடுக்க கூடாது.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை