உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாதுராம் சுவாமிகளின் 24ம் ஆண்டு ஆராதனை

சாதுராம் சுவாமிகளின் 24ம் ஆண்டு ஆராதனை

ஹலசூரு : ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை சார்பில், சாதுராம் சுவாமிகளின் 24வது ஆராதனை மஹோற்சவம் இன்று துவங்குகிறது.பெங்களூரு ஹலசூரின் தேர் வீதியில், ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை இயங்குகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், 23 ஆண்டுகளாக சாதுராம் சுவாமிகளின் ஆராதனை மஹோற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்தாண்டு 24வது ஆராதனை மஹோற்சவம், ஹலசூரின் சோமேஸ்வரா கோவில் தெருவில் உள்ள எஸ்.எஸ்.எஸ்., ஜெயின் சாரக் சங்கா மண்டபத்தில் இன்று முதல், 11ம் தேதி வரை நடக்கிறது.இன்று காலை 6:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம்; 10:00 மணி முதல், நண்பகல் 12:30 மணி வரை: லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை, சஹஸ்ர தீபோற்சவம், பிரசாத வினியோகம். மதியம் 3:30 மணி முதல், இரவு 8:00 மணி வரை, பெங்களூரு பி.வி.அனந்தநாராயணன் தலைமையிலான ஸ்ரீ கோபாலகிருஷ்ணா நாம பிரசார மண்டலி குழுவினரின் குத்து விளக்கு ராதா மாதவா கல்யாணம்; 8:00 மணிக்கு தீபாராதனை, பிரசாத வினியோகம் நடக்கிறது.தொடர்ந்து, நாளையும், நாளை மறுதினமும் பல்வேறு பூஜைகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்