உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் 3 பெண் நக்சல்கள் பலி

சத்தீஸ்கரில் 3 பெண் நக்சல்கள் பலி

நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மற்றும் காங்கர் மாவட்டங்களின் எல்லை பகுதியில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடிப்படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் மூன்று பெண் நக்சல்கள் கொல்லப்பட்டனர்.தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை