உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனடாவில் 3 இந்தியர்கள் கைது: விவரம் வரும் வரை காத்திருப்போம் என்கிறார் ஜெய்சங்கர்

கனடாவில் 3 இந்தியர்கள் கைது: விவரம் வரும் வரை காத்திருப்போம் என்கிறார் ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்த மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெரிவிக்கும் வரை காத்திருப்போம்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், 2023 ஜூன் 18ல், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாள தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், மூன்று இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்தனர்.இது குறித்து ஜெய்சங்கர் கூறியதாவது: கைது செய்யப்பட்ட இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெரிவிக்கும் வரை காத்திருப்போம். கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவில் உள்ள ஒரு சிலருடன் தொடர்பில் இருப்பது போல் தெரிகிறது. பஞ்சாபிலிருந்து திட்டமிட்டு கனடாவில் சில குற்ற சம்பவங்கள் நடந்து வருவது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Vasudevan
மே 06, 2024 20:38

கள்ள கடத்தல், ஆயுத கடத்தல், கொள்ளை, போதை பொருள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து என பல பஞ்சாபி குழுக்கள் கனடாவில் காலீஸ்தான் கூட்டம் அது தனி கதை இது எல்லாம் எப்போதும் கொலை, கடத்தல் என்று பல ஆயுத குழுக்கள் சண்டை நடக்கும் பாடகர் சித்து மூஸ் வாலா கொலையும் இப்படித்தான் பஞ்சாப் சிறையில் உள்ள இன்னொரு டான் லாரன்ஸ் பிஷனோய் அவ்வளவு powerful டெல்லி, பஞ்சாப், கனடா எல்லா குழுக்களையும் சிறையில் இருந்து கட்டு படுத்துவான் ஜஸ்டின் ட்ருடோ அரசு, காலீஸ்தான் ஆதரவு அரசியல் குழு தயவில் அவர் மைனாரிட்டி அரசாங்கம் நடக்குது அதனால் ந்டப் கட்சி சொல்லுவதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாக ட்ருடோ அவர் ஆளும் அரசுக்கும் மக்கள் இடையே மதிப்பு இல்லை அவர் அரசியல் அஸ்தமனம் தொடங்கி விட்டது மோடி மேல் இருக்கும் அரசியல் வெறுப்பை காட்ட இது ஒரு அசிங்கமான அரசியல் நாடகம் ???


விவேக்
மே 05, 2024 13:35

அதான் படத்தோட விவரமா நியூஸ் போட்டிருக்காங்களே


J.V. Iyer
மே 05, 2024 12:58

எல்லாம் கொடுக்கல் வாங்கலில் உள்குத்தாக இருக்கும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை