| ADDED : மே 23, 2024 10:06 PM
பங்கார்பேட்டை: நாட்டுத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.பூதிக்கோட்டை அருகே பலமடுகு என்ற கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதும், பழுதுபார்த்தல் பணிகள் செய்வதும் நடத்தி வருவதாக பூதிக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம், தங்கவயல் மாவட்ட டி.எஸ்.பி., பாண்டுரங்கா தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர்.பலமடுகு கிராமத்தின் மாரப்பா, தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பரியகுத்தி கிராமத்தின் ராஜப்பா, சூளகிரி அருகே உள்ள ராமண தொட்டியின் தர்மன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் தயாரித்து வைத்திருந்த 8 நாட்டுத் துப்பாக்கிகளையும், 80 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.