ரயிலில் பாய்ந்து 3 பெண்கள் தற்கொலை
கோட்டயம்: கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தின் பரோலிக்கல்லைச் சேர்ந்தவர் சைனி குரியகோஸ், 42. இவர், தன் மகள்கள் அலினா, 11, இவானா, 10, ஆகியோருடன் வசித்து வந்தார். தொடுபுழாவில் உள்ள கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன், தன் மகள்களுடன் பரோலிக்கல் என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தார்.குடும்ப தகராறால் விரக்தியில் இருந்த சைனி தன் இரு மகள்களுடன், கோட்டயத்தில் இருந்து நிலாம்பூர் நோக்கி எட்டுமனுார் வழியாக நேற்று சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.விரைவு ரயிலின் லோகோ பைலட் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூன்று பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறு காரணமாக சைனி, தன் மகள்களுடன் தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.