உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 326 சிறுமியர் கர்ப்பம் அமைச்சர் ஊரில் அதிர்ச்சி

326 சிறுமியர் கர்ப்பம் அமைச்சர் ஊரில் அதிர்ச்சி

துமகூரு: உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் சொந்த ஊரான துமகூரில், ஓராண்டில் 326 சிறுமியர் கர்ப்பம் அடைந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடகாவின் வட மாவட்டமான ராய்ச்சூரில், குழந்தை திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடக்கும். இதை தடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஓராண்டில் சிறுமியர் கர்ப்பம் குறித்து, கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஒரு ஆய்வு நடத்தியது.இந்த ஆய்வில் துமகூரு மாவட்டத்தில் மட்டும் 326 சிறுமியர் கர்ப்பம் ஆனது தெரிந்தது.குழந்தை திருமணங்கள், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, பலாத்காரம் உள்ளிட்டவைகளால் கர்ப்பம் அடைந்தது தெரியாமலேயே, கர்ப்பம் அடைந்தது தெரிய வந்துள்ளது.கர்நாடகாவில் குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுக்க, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்றும், பெற்றோர்களை சந்தித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இப்படி இருக்கும் சூழ்நிலையில் குழந்தை திருமணங்களாலும் சிறுமியர் கர்ப்பமாகி இருப்பது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இத்தனைக்கும் துமகூரு உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் சொந்த ஊராகும். சொந்த ஊரிலேயே குழந்தை திருமணங்களை தடுக்க முடியாத நிலைக்கு, பரமேஸ்வர் தள்ளப்பட்டுள்ளார்.இப்பிரச்னை குறித்து, பெங்களூரு கே.ஜி., அரசு பொது மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் இந்திரா கூறுகையில், ''சிறுமியர் கர்ப்பம் ஆவது, அவர்களது உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். சிறுமி குழந்தை பெற்றெடுத்தால் ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.''உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்புள்ளது. சிறுமியர் கர்ப்பம் தரிப்பது சமூக பிரச்னையாக மாறி விட்டது. இதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

R SRINIVASAN
ஜூலை 12, 2024 07:25

தமிழ் நாட்டில் இது போன்று நடக்காமல் இருக்க கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைத்து ஊர் கட்டுப்பாடு விதித்து பெண்களை பாதுகாக்க வேண்டும் நாகரிகம் என்ற பெயரில் பெண்கள் அரைகுறை ஆடை அணிவதை தடுத்து இந்திய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும். நகரங்களில் தெருவுக்கு தெரு குழுக்கள் அமைத்து ரோந்து பணியில் ஆண்கள் ஈடுபட வேண்டும். பெண்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும். பெண்கள் பெரியவர்கள் துணையுடன் வெளியே செல்ல வேண்டும். இதற்க்காக முதியவர்களை ஓல்ட் ஏஜ் ஹோமுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து பராமரிக்க வேண்டும் சிறிய வயதிலேயே சிறுவர்கள் சிறுமியர்களை கண்காணிக்க வேண்டும்


Madhu Nandagopal
ஜூலை 10, 2024 11:52

Government should take immediate action. Else, Girl child can not be survive their life in a proper manner. I request to Government to take immediate action.


R. THIAGARAJAN
ஜூலை 10, 2024 07:24

சமூக நல்லதுர்நல்லதுரை குழந்தைகள் நலத்துறை மாவட்ட ஆட்சியர் என்னா செய்க்கிறார்கள் ?????


Senthilnathan Subramanian
ஜூலை 09, 2024 17:21

ஆண்டவா , பகவானே, இந்த நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்


Palanisamy Narayanasamy
ஜூலை 09, 2024 10:39

என்ன ஊருய்யா, இது.... த்தூ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 09, 2024 09:38

காலத்திற்கெற்றர் போல் கல்வி அறிவு பல மொழிகள் கற்ப்பித்தல் இல்லாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் கல்வி இருந்தால் இப்படி தான் சமூக பிரச்சினைகள் வரும். தமிழக அரசும் இதைப் பார்த்தாவது மும்மொழி திட்டம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் கற்க மாணவர்கள் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் கல்வி புகுத்தி வேலை வாய்ப்புகளுக்கு வெளி மாநிலம் வெளி நாடு செல்லும் விதமாக மாணவ மாணவிகளை தயார் செய்ய வேண்டும் இல்லையெனில் தமிழகமும் போதை கருக்கலைப்பு கொலை கொள்ளை போன்ற சமூக விரோத செயல்கள் காண வேண்டி வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. கூடிய சீக்கிரமே நடக்கும்.


Appavu Appavu
ஜூலை 09, 2024 07:05

வாழ்க மினிஸ்டர்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை