உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "ஊழலை எதிர்த்தவர் ஊழலுக்காக சிறையில் இருக்கிறார்": கெஜ்ரிவாலை சாடிய அனுராக் தாக்கூர்

"ஊழலை எதிர்த்தவர் ஊழலுக்காக சிறையில் இருக்கிறார்": கெஜ்ரிவாலை சாடிய அனுராக் தாக்கூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஊழலை எதிர்த்து போராடுவேன் என்று சொன்னவர். இப்போது ஊழலுக்காக சிறையில் இருக்கிறார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அனுராக் தாக்கூர் கூறியதாவது: ஆம் ஆத்மி, காங்கிரசுக்கு தனி சட்டங்கள் வேண்டுமா?. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கிறார். ஊழலை எதிர்த்து போராடுவேன் என்று சொன்னவர். இப்போது ஊழலுக்காக சிறையில் இருக்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) 'நான் அரசியலில் சேர மாட்டேன். என் குழந்தைகள் மீது சத்தியம் செய்கிறேன் எனக் கூறியிருந்தார்.பின்னர் அரசியலில் சேர்ந்தார். காங்கிரஸுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறிவிட்டு, தற்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளார். முன்னாள் துணை முதல்வர் கிட்டத்தட்ட 18 மாதங்கள் சிறையில் இருக்கிறார். ஊழல் செய்பவர்கள் யார் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். பா.ஜ.,வைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எங்கள் கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும் சரி ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Jayaraman Ramaswamy
மார் 29, 2024 12:07

Kejriwal knew how to make money Unless one comes to power, one cant make money Thats why he started a party, opposed corruption and came to power, started his mission


Raja Guru
மார் 29, 2024 10:58

ஊழல் செய்தவர்கள் பிஜேபில் சேர்ந்தால் புனிதர் ஆகி விடுவார்கள்


M S RAGHUNATHAN
மார் 28, 2024 18:47

Kejriwal has now become"caged wal"


M S RAGHUNATHAN
மார் 28, 2024 18:47

ஊழலை எதிர்க்கிறேன், ஒழிப்பேன் என்று வாய் கிழிய பேசியவர் ஊழலின் ஊற்றுக் கண்ணாக மாறிவிட்டார்


பேசும் தமிழன்
மார் 28, 2024 18:07

ஊழலை எதிர்த்தவர்.... ஊழலுக்காக சிறையில் இருக்கிறார்.... சேர்க்கை அப்படி.... ஊழல் கான் கிராஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால்... அவரும் அதை தானே செய்வார் ???


Manoranjith M
மார் 28, 2024 16:34

இதே நிலை உங்கள் கட்சியில் விரைவில் நடக்கும்


Manoranjith M
மார் 28, 2024 16:26

Chrome Android


Vijay
மார் 28, 2024 14:17

இதே நிலை உங்கள் கட்சியில் இருக்கும் எல்லோருக்கும் வெகு விரைவில் நடக்கும்...


Raja Guru
மார் 29, 2024 11:18

ஆம்


Raja Guru
மார் 29, 2024 11:19

ஆட்சியாளர்களுக்கும் விரைவில் வரும்


surya krishna
மார் 28, 2024 14:15

கெஜ்ரி ஒரு போர்ஜெரி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை