உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "நான் ஜோதிடர் அல்ல": நிருபர்கள் கேள்விக்கு பிரியங்கா பதில்

"நான் ஜோதிடர் அல்ல": நிருபர்கள் கேள்விக்கு பிரியங்கா பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: இண்டியா கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‛‛ நான் ஜோதிடர் அல்ல. இண்டியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பதில் அளித்தார்.உத்தரபிரதேச மாநிலம் சகாரன்பூரில் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: அட்டூழியங்களுக்கும் அநீதிக்கும் எதிராக மக்கள் நிற்கிறார்கள். இதற்கு இந்த மாபெரும் கூட்டமே சான்று. இன்று ராம நவமி. அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தேர்தல் பத்திரம் ஒரு வெளிப்படையான திட்டம் என பிரதமர் மோடி கூறுகிறார். பிறகு ஏன் நன்கொடையாளர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டது?விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் பிரச்னைகளை பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை. இன்று ஒரு விவசாயி 10 ஆயிரம் ரூபாய் கடனுக்காக தற்கொலை செய்து கொள்கிறார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஊழல் செய்யாமல் தேர்தல் நடத்தினால், பா.ஜ., 180க்கும் குறைவான தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

நான் ஜோதிடர் அல்ல

இண்டியா கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரியங்காவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு,‛‛ நான் ஜோதிடர் அல்ல. இண்டியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்'' என பிரியங்கா பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அருண் பிரகாஷ் மதுரை
ஏப் 17, 2024 22:52

பாஜக 180 தான் வெற்றி பெறும் என்று கூறும் நீங்கள் மீதமுள்ள 360 இண்டி கூட்டணி வெற்றி பெறும் என்று கூற ஏன் தயக்கம்.அது நடக்காது என்று தெரிந்து பதில் சொல்லாமல் மழுப்பல்.எப்படி குறைத்து சொன்னாலும் பாஜக தனியாக 300 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும்.முதலில் உங்கள் கட்சிக்கு வேட்பாளர் தேர்வை நிறைவு செய்யுங்கள்.அப்புறம் வெற்றி பற்றிப் பேசலாம்.


Visu
ஏப் 17, 2024 21:58

EVMம் மீது இப்போதே குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்


ஆரூர் ரங்
ஏப் 17, 2024 17:28

(மைனஸ்)ஒன்றுக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் வெ(ற்)றி பெறும்.


என்றும் இந்தியன்
ஏப் 17, 2024 16:43

"நான் மானிட ஜென்மம் அல்ல"என்று அதை படியுங்கள் விஷயங்கள் மிக நன்றாக புரியும்


Sivasankaran Kannan
ஏப் 17, 2024 15:59

ஐம்பதுக்கும் உள்ளே என்றால், இந்தியா தப்பித்தது


Balasubramanian
ஏப் 17, 2024 15:26

நல்ல வேளை மேடம்! நீங்கள் மட்டும் தமிழகத்தில் இருந்து கிளி ஜோசியம் தெரியும் என்று ஆர்வக் கோளாறு காரணமாக சொல்லி இருந்தீர்கள் என்றால்!


KavikumarRam
ஏப் 17, 2024 15:17

கொள்ளையடிப்பதை தவிர தாங்கள் வேறு எதுவுமே இல்லை


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ