உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "பயங்கரவாதிகளுக்கு சிறை அல்லது நரகம் தான்": பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து மத்திய அமைச்சர் பதில்

"பயங்கரவாதிகளுக்கு சிறை அல்லது நரகம் தான்": பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து மத்திய அமைச்சர் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார்.கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி பிரமோத் திவாரி ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார்.இதற்கு நித்யானந்த் ராய் அளித்த பதில்: பயங்கரவாதிகளின் தாக்குதல் விரைவில் முடிவுக்கு வரும். பயங்கரவாதிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். கடந்த சில நாட்களில், ஜம்மு காஷ்மீரில் 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சில பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

ஒழிப்போம்

370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, சுமார் 900 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கொன்றுள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிப்போம் என நான் சபைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீரில் 7,217 பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்துள்ளன. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் 2,259 ஆகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Narayanan Muthu
ஜூலை 24, 2024 20:19

இன்றைய ராஜ்ய சபாவில் TMC உறுப்பினர் தெரிவித்த கருத்து கடந்த ஆறு மாதங்களில் காஷ்மீரில் 26 தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. வெறும் வெட்டிப்பேச்சை தவிர்த்து ஆக்கபூர்வ நடவடிக்கை எடுத்தால் தேவலாம்


subramanian
ஜூலை 24, 2024 19:05

இனிமேல் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களை காஷ்மீரில் குடியமர்த்த வேண்டும்.


Priyan Vadanad
ஜூலை 24, 2024 19:42

வாங்க அங்கே போய்விடலாம்.


subramanian
ஜூலை 24, 2024 19:04

நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். தீவிரவாதிகளை கண்டவுடன் சுட்டு கொல்வது சிறப்பு.


Ramesh Sargam
ஜூலை 24, 2024 18:25

பயங்கரவாதிகளுக்கு என்கவுண்டர். அவர்களை ஆதரித்து, அடைக்கலம் கொடுப்பவர்களுக்கு வாழ்நாள் முழுக்க சிறை.


Premanathan Sambandam
ஜூலை 24, 2024 18:02

சிறையில் போட்டு தண்டனை கொடுப்பதற்குள் அவர்களே காலமாகி விடுவார்கள் எல்லாம் வெறும் உதார்தான்


Anand
ஜூலை 24, 2024 17:47

சிறை வேண்டாம், சுட்டுக்கொன்று நரகத்திற்கு அனுப்புங்கள், கூடவே இவனுங்களுக்கு முட்டுக்கொடுக்கும் இங்குள்ள அரசியல் ஒட்டுண்ணிகளையும் அனுப்புங்கள்..


மேலும் செய்திகள்





புதிய வீடியோ